T20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரில், இலங்கை அணி எதிர்கொள்ளும் முதலாவது போட்டி அயர்லாந்துக்கு எதிராக இன்று இடம்பெறவுள்ளது.
இந்த போட்டி இன்று (08) ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.சொந்த மண்ணில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வெற்றியுடன் தொடரைத் தொடங்க இலங்கை அணி முயற்சிக்கும். அதே நேரத்தில், தங்களின் வெற்றிக் கணக்கைத் தொடங்க அயர்லாந்து அணி தீவிரமாக முயலும். எனவே, இந்த இரு அணிகள் மோதும் போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
T20 world cup 2026: 20 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா நேற்று சனிக்கிழமை முதல் இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக தொடங்கியது. மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெறும் இந்தத் தொடரில் இன்று மூன்று லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில், கொழும்பில் அமைந்துள்ள ஆர். பிரேமதாச ஸ்டேடியத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் 6-வது லீக் ஆட்டத்தில், குரூப் B-யில் இடம் பெற்றுள்ள தசுன் ஷானக(Dasun Shanaka) தலைமையிலான இலங்கை அணி, பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணியுடன் மோதுகிறது.
இரு அணிகளின் வீரர்கள் பட்டியல்...
இலங்கை அணி: பதும் நிஸ்ஸங்க, கமில் மிஷார, குசல் மெண்டிஸ் (W), பவன் ரத்நாயக்க, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, துனித் வெல்லலகே, தசுன் ஷானக (C), துஷ்மந்த சமீர, மஹீஷ் தீக்ஷன, மதீஷ பத்திரன, பிரமோத் மதுஷான், குசல் மென்டிஸ், குசல் அஸ்லங்க பெரேரா
அயர்லாந்து அணி: பால் ஸ்டிர்லிங் (C), ராஸ் அடேர், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர் (W), கர்டிஸ் கேம்பர், பெஞ்சமின் கலிட்ஸ், கரேத் டெலானி, ஜார்ஜ் டோக்ரெல், மார்க் அடேர், பேரி மெக்கார்த்தி, மேத்யூ ஹம்ப்ரீஸ், டிம் டெக்டர், சிரா வைட், ஜோசுவா லிட்டில்
