திருச்சூரில் எளிய முறையில் நடந்த Vedan – நவமி லதா திருமணம் – ரசிகர்கள் வாழ்த்து !!

Author
0

இளையோரிடையே  மிகவும் பிரபலமான   பிரபல ராப் பாடகர் வேடன், தனது நீண்ட நாள் காதலியான நவமி லதாவை திருமணம் செய்துகொண்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.‘Voice of the Voiceless’ என்ற பாடல் மூலம் பிரபலமான கேரளாவை சேர்ந்த ராப் பாடகர் வேடன், மஞ்சுமல் பாய்ஸ், நரிவேட்டை உள்ளிட்ட மலையாள படங்களில் பாடல் பாடி விருதுகளை அள்ளினார்.

எளிய முறையில் பாடகர் வேடன் திருமணம்

அதுமட்டுமல்லாது தமிழிலும் பைசன் படத்தில் "றெக்க றெக்க" எனும் பாடலை பாடி ரசிகர்கள் மனதில் தனக்கென இடம்பிடித்தார்  . அண்மையில், தனது காதலி நவமி லதாவை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய வேடன், அவரை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்திருந்தார்.தனது காதலியும் எழுத்தாளருமான நவமி லதாவை திருச்சூரில் உள்ள இல்லத்தில் எளிய முறையில் பாடகர் வேடன் திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் புதுமண தம்பதிகளுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேவேளை பிரபல ராப் பாடகர் வேடனின் தாயார் இலங்கை தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top