யுத்தச்சூழல் காரணமாக வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு தொழில் இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லையென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.இருப்பினும், பணியாளர்கள் நாட்டைவிட்டு செல்வதில் தாமதம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
சிக்கலான எதிர்காலம்இதேவேளை, மேற்கு ஆசியாவின் யுத்தச்சூழல் காரணமாக தொழில் இழப்பு ஏற்படுமென உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் அமைப்பொன்று தெரிவித்துள்ளது.80 வீதத்திலிருந்து 90 வீதம் வரை வருடாந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேற்கு ஆசியாவிலேயே தங்கியுள்ளதென உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் அமைப்பின் செயலாளர் எம்.எவ்.எம்.அர்சாத் தெரிவித்தார்.ஒவ்வொரு வருடமும் அதிகார ரீதியாக 3,00,000 பேர் வேலை பெற்று மேற்கு ஆசியா செல்கின்றனர்.இவர்களில் 2,30,000 பேர் வேலையை இழக்கும் சூழல் ஏற்படும் என்றும்,சிக்கலான எதிர்காலத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
