இலங்கை கடற்பரப்பிற்கு அருகே ஈரானியப் போர்க்கப்பல் ஒன்று அமெரிக்கப் படைகளால் மூழ்கடிக்கப்பட்ட விவகாரம் !!!

Author
0
இலங்கை கடற்பரப்பிற்கு அருகே ஈரானியப் போர்க்கப்பல் ஒன்று அமெரிக்கப் படைகளால் மூழ்கடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். கென்டக்கி மாகாணத்தின் ஹேப்ரன் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தளபதிகளிடம் ட்ரம்ப் எழுப்பிய கேள்வி
இலங்கை கடற்பரப்பில் வைத்து ஈரானியப் போர்க்கப்பல் தாக்கப்பட்ட போது, அதில் இருந்த மாலுமிகள் மற்றும் வீரர்கள் கொல்லப்பட்டமை குறித்துத் தான் அதிருப்தி அடைந்ததாக அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். "ஏன் அவர்களை நாம் கொல்ல வேண்டும்? அவர்களைக் கைது செய்து எமது கடற்படையில் சேர்த்திருக்கலாமே?" எனத் தனது இராணுவத் தளபதிகளிடம் தான் கேள்வி எழுப்பியதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், அந்த வீரர்கள் அமெரிக்கக் கடற்படையில் இணைவதற்கான தகுதியைக் கொண்டிருக்கவில்லை என இராணுவத் தரப்பில் பதிலளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
சர்ச்சையை ஏற்படுத்திய தளபதியின் பதில்
ஈரானிய வீரர்களைக் கைது செய்யாமல் அவர்களைக் கொல்வதற்கான அவசியம் என்ன என்பது குறித்துத் தான் மீண்டும் வினவிய போது, அதற்கு ஒரு இராணுவத் தளபதி வழங்கிய பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ட்ரம்ப் கூறினார். "அவர்களைக் கைது செய்வதை விட, அவர்களைக் கொல்வதுதான் அதிக வேடிக்கையான விடயம் (A lot more fun)" என அந்தத் தளபதி தன்னிடம் கூறியதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். யுத்தக் களத்தில் இராணுவத் தளபதிகளின் இத்தகைய மனநிலை குறித்து அவர் தனது உரையில் விவரித்துள்ளார்.

#Tubetamil24X7 #Tubetamil #SriLanka #IranWar2026 #DonaldTrump #MaritimeWar #USvsIran #BreakingNewsTamil #JaffnaNews #GlobalPolitics #WorldWar3 #TamilNewsToday #EelamNews 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top