"ஹே ட்ரம்ப், You're Fired!": அமெரிக்க அதிபரை ஆங்கிலத்தில் கேலி செய்த ஈரானிய ராணுவம்!
உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் உயிர்நாடியான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) முழுமையாகத் திறக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த 48 மணிநேர இறுதி எச்சரிக்கையின் கெடு நெருங்கி வரும் நிலையில், ஈரான் அதனைச் சற்றும் பொருட்படுத்தாது அமெரிக்க அதிபரைப் பகிரங்கமாகக் கேலி செய்துள்ளது."You're Fired" வீடியோ:
ஈரானின் அதியுயர் ராணுவக் கட்டளை மையமான 'காதம் அல் அன்பியா' (Khatam al Anbiya central headquarters) மத்திய தலைமையகத்தின் பேச்சாளர் எப்ராஹிம் சுல்ஃபகாரி (Ebrahim Zolfaghari), ட்ரம்பை நேரடியாகத் தாக்கி ஆங்கிலத்தில் சிறிய காணொளி (video clip) ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "ஹே ட்ரம்ப், நீங்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளீர்கள்! (Hey Trump, YOU’RE FIRED!). இந்த வாக்கியம் உங்களுக்கு மிகவும் பரிச்சயமானது. இந்த விடயத்தில் நீங்கள் காட்டிய கவனத்திற்கு நன்றி" என மிகவும் நையாண்டியாகக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க அதிபரின் சொந்தச் சொற்றொடரையே பயன்படுத்தி ஈரானிய ராணுவ உயர்மட்ட அதிகாரி ஒருவர் சவால் விடுத்துள்ளமை சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் மாபெரும் பதிலடி எச்சரிக்கை:
ஒருபுறம் ட்ரம்பைக் கேலி செய்தாலும், மறுபுறம் அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்க ஈரான் தயாராகவே உள்ளதை இந்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், ஈரானின் எரிசக்தி மற்றும் மின்னுற்பத்தி வலையமைப்புகளை (energy grid) அமெரிக்கா தாக்க முற்பட்டால், அதற்குப் பதிலடியாக அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் மீது "மிகக் கடுமையான தண்டனைக்குரிய பதிலடித் தாக்குதல்கள்" (punishing retaliatory strikes) முன்னெடுக்கப்படும் என ஈரான் மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாகச் சபதமேற்றுள்ளது.
#Tubetamil24X7 #Tubetamil #DonaldTrump #YouAreFired #IranWar2026 #StraitOfHormuz #BreakingNewsTamil #Jaffna #WorldWar3 #TamilNewsToday
