அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் NBC செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய தொலைபேசி நேர்காணலில், ஈரான் விவகாரம் குறித்துப் பல அதிரடித் தகவல்களை வெளியிட்டுள்ளார். ஈரான் தற்போது ஒரு உடன்படிக்கைக்கு (Deal) வர விரும்புவதாகவும், ஆனால் அதன் நிபந்தனைகள் இன்னும் போதுமானதாக இல்லாததால் தாம் அதற்குத் தயாராக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய அம்சங்கள்:
கார் தீவுத் தாக்குதல்: ஈரானின் பொருளாதார மையமான கார் தீவு ஏற்கனவே தரைமட்டமாக்கப்பட்டுவிட்டது. இருப்பினும், "சும்மா வேடிக்கைக்காக" (Just for fun) இன்னும் சில முறை அங்கே குண்டு வீசக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.தலைமை குறித்த சந்தேகம்: ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி உண்மையில் உயிரோடு இருக்கிறாரா? என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி: கடலில் கண்ணிவெடிகள் இருப்பதை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், உலக நாடுகளுடன் இணைந்து அந்தப் பகுதியை முழுமையாகச் சுத்தப்படுத்த அமெரிக்கா தயாராக உள்ளது.
பொருளாதார தாக்கம்: உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு குறித்துத் தாம் கவலைப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
