இஸ்ரேல் மீது ஈரான் புதிய ஏவுகணை தாக்குதல் !!!

Author
0
இஸ்ரேல் மீது ஈரானின் புதிய ஏவுகணைப் போர்: எய்லாட்டில் 10 இடங்களில் பாரிய வெடிப்பு - லெபனானை ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம்!
மத்திய கிழக்குப் போர்க்களத்தில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ஈரான் புதிய கட்ட ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. இத்தாக்கதலில் இஸ்ரேலின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள ராணுவ இலக்குகள் மற்றும் உள்கட்டமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
எய்லாட் நகரில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாண்டவம்:
தெற்கு இஸ்ரேலின் முக்கிய துறைமுக நகரமான எய்லாட்டில் (Eilat) சுமார் 10 இடங்களில் ஈரானிய ஏவுகணைகள் விழுந்து வெடித்துள்ளன. இத்தாக்குதலில் காயமடைந்த 7 பேரில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஜோர்டானின் எல்லைப் பகுதியிலிருந்து பார்க்கும்போது எய்லாட் நகரம் புகை மண்டலமாகக் காட்சியளிப்பதாகச் சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
டெல் அவிவ் மற்றும் ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்
இஸ்ரேலின் மையப்பகுதியான டெல் அவிவ், பென் புரியன் விமான நிலையம் மற்றும் முக்கிய உளவுத்துறை அலுவலகங்களை இலக்கு வைத்து ஈரான் பல ஏவுகணைகளை ஏவியுள்ளது. இஸ்ரேலிய ராணுவத் தணிக்கைப் பிரிவு இத்தாக்குதல்கள் குறித்த விபரங்களை மறைக்க முயன்ற போதிலும், ராணுவத் தளங்கள் மற்றும் கட்டிடங்களுக்குப் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
லெபனான் ஆக்கிரமிப்பு மற்றும் பிரான்சின் அமைதி முயற்சி:
லெபனான் எல்லையில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க, லெபனான் இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்ற புதிய அமைதித் திட்டத்தைப் பிரான்ஸ் முன்மொழிந்துள்ளது. இருப்பினும், இஸ்ரேலிய அமைச்சரவை லெபனானின் சுமார் 10 சதவீத நிலப்பகுதியை, அதாவது லிட்டானி நதி வரை ஆக்கிரமிப்பதற்கான ராணுவத் திட்டங்களை ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

#Tubetamil24X7 #Tubetamil #IranMissileAttack #IsraelUnderAttack #LebanonConflict #RonDermer #BreakingNewsTamil #Jaffna #WorldWar3 #OperationEpicFury #TamilNewsToday 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top