ஈரான் பதிலடி: அமெரிக்கா குறிவைத்து தாக்கம் !!!

Author
0
அமெரிக்காவின் கள்ள விளையாட்டு அம்பலம்: ஈரானை கோப்பி பண்ணி கள்ள Drone செய்த அமெரிக்கா - அண்டை நாடுகளைத் தாக்கிவிட்டு ஈரான் மீது பழி!
ஈரானின் புகழ்பெற்ற 'ஷாஹெட்' (Shahed) ட்ரோன்களைப் போலவே தோற்றமளிக்கும் 'லூகாஸ்' (Lucas) ரக போலி ட்ரோன்களைப் பயன்படுத்தி, அமெரிக்காவும் இஸ்ரேலும் பிராந்திய நாடுகளின் மீது தாக்குதல் நடத்தி வருவதாக ஈரானிய இராணுவம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது. இதன் மூலம் ஈரானுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சதித்திட்டம் அம்பலம்:
ஈரானிய இராணுவத்தின் 'காதம் அல்-அன்பியா' (Khatam al-Anbiya) தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சமீபநாட்களில் துருக்கி, குவைத் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட மர்மத் தாக்குதல்களுக்கு இந்தப் போலி ட்ரோன்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. ஈரானின் இராணுவ நடவடிக்கைகளைக் கொச்சைப்படுத்தவும், ராஜதந்திர ரீதியாக ஈரானைத் தனிமைப்படுத்தவும் அமெரிக்கா இந்த 'கள்ள விளையாட்டை' அரங்கேற்றி வருவதாக ஈரான் சாடியுள்ளது.

#Tubetamil24X7 #Tubetamil #IranWar2026 #DroneWar #USIsraelExposed #FalseFlag #BreakingNewsTamil #Jaffna #WorldWar3 #OperationEpicFury #TamilNewsToday 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top