ஈரானை எதிர்த்து வன்மையாக கண்டிக்கும் ஏழு அரபு நாடுகள் !!

Author
0

   ஈரானின் "பொறுப்பற்ற" தாக்குதல்களைக் கண்டித்து , அமெரிக்கா, பஹ்ரைன், ஜோர்டான், குவைத், கத்தார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

ஈராக், ஜோர்டான், குவைத், ஓமான், கத்தார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் இறையாண்மைக்கு எதிராக  ஈரான்நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை இந்த நாடுகள் வன்மையாகக் கண்டித்துள்ளன.



இறையாண்மையை மீறும் ஆபத்தான செயல்

ஈரானின் இந்தத் தாக்குதல்கள் எந்தவொரு நியாயமும் அற்றவை எனவும், இவை பொதுமக்கள் வாழும் பகுதிகள் மற்றும் பொதுக் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதோடு ஈரானின் இத்தகைய நடவடிக்கைகள் பிராந்திய அமைதியை சீர்க்குலைப்பதோடு, பல நாடுகளின் இறையாண்மையை மீறும் ஆபத்தான செயல் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் தங்கள் குடிமக்கள் மற்றும் நிலப்பகுதியைப் பாதுகாக்க தங்களுக்கு முழு உரிமை உண்டு எனவும், ஈரானின் தாக்குதல்களைத் தடுக்க வான் பாதுகாப்பு ஒத்துழைப்பு சிறப்பாகச் செயல்பட்டதாகவும் நாடுகள் தெரிவித்துள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top