அரநாயக்க வைத்தியசாலையில் பணியாற்றிய தாதி ஒருவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த காதலன் !

Author
0

 அரநாயக்க வைத்தியசாலையில் பணியாற்றிய ஒரு பிள்ளையின் தாயானதாதி ஒருவரைக் கத்தியால் குத்திக் கொலை  செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவரது காதலனை, எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவனல்லை நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

அரநாயக்க, நிக்கபிட்டிய பகுதியைச் சேர்ந்த வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பணிபுரியும் 33 வயதுடைய நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கணவரை பிரிந்து தனிமையிலிருந்த தாதிக்கு காதலன் நடத்திய கொடூரம் ; இலங்கையில் சம்பவம் | Boyfriend S Brutal Act Against Nurse

தகாத உறவு

இச்சம்பவத்தில் அரநாயக்க வைத்தியசாலையில் பணிபுரிந்த 35 வயதுடைய தாதியே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் தனது கணவரைப் பிரிந்து, ஏழு வயதுடைய மகனுடன் தீப்பிட்டிய பகுதியில் வாடகை வீடொன்றில் வசித்து வந்துள்ளார். இதன்போது, சந்தேகநபருடன் அவர் தகாத உறவைப் பேணி வந்தார் என்று கூறப்படுகின்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top