அனைத்து துப்புரவுப்பொருட்கள் மற்றும் திரவங்களின் விலை நேற்று (08) நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
நேற்று (08) நள்ளிரவு முதல் இருபத்தைந்து சதவீத விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
உயர்வுக்கான காரணம்
நேற்று (08) நடைபெற்ற ஊடக சந்திப்பில் உள்ளூர் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு கிலோ சவர்க்கார தூளின் விலை எழுபத்தைந்து ரூபாயும், பாத்திரம் கழுவும் திரவத்தின் விலை 150 ரூபாயும், கழிப்பறை சுத்தம் செய்யும் திரவத்தின் விலை 115 ரூபாயும், கை கழுவும் திரவத்தின் விலை 120 ரூபாயும் மற்றும் வாகனம் கழுவும் திரவத்தின் விலை 100 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தப் பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணங்களின் விலை உயர்வு காரணமாக, தங்கள் பொருட்களின் விலையை உயர்த்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
