மகனுடன் சென்ற தந்தைக்கு நடுவீதியில் நடந்த துயரம் ; பேருந்து சாரதியால் வந்த வினை..

Author
0

காலி நகரத்திற்கு அருகில் கொழும்பு - காலி பிரதான வீதியில்  தனியார் பேருந்து ஒன்று  மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் கிங்தொட்டை பகுதியை சேர்ந்த 58 வயதான மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்துள்ளதுடன் மற்றும் அவரது 16 வயதான மகன் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 காலி நகருக்கு அருகில் கொழும்பு - காலி பிரதான வீதியில் தனியார் பஸ் ஒன்று கார் ஒன்றை மோட்டார் சைக்கிளுடன் மோதிமுந்திச் செல்ல முயன்றபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 



 

 சாரதி கைது 

இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அதில் 58 வயதான மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரது 16 வயதான மகன் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் காலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top