ஏப்ரல் 29: "மன்னர் சார்லஸ் என்னுடன் முழுமையாக உடன்படுகிறார்!
"அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தின் 250-வது ஆண்டு விழாவைக் கொண்டாட இங்கிலாந்து மன்னர் சார்லஸ் அமெரிக்கா வந்துள்ள நிலையில், ஈரானுக்கு எதிராக மாபெரும் சபதம் ஏற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்!" 
வெள்ளை மாளிகையில் செவ்வாயன்று நடைபெற்ற சிறப்பு அரசு விருந்தில், மத்திய கிழக்குப் போர் குறித்து இங்கிலாந்து மன்னர் சார்லஸ் உடன் இணைந்து டிரம்ப் மாபெரும் அதிரடித் தகவல்களை வெளியிட்டுள்ளார்!
ஈரான் ஒருபோதும் அணுவாயுதத்தை வைத்திருக்கக் கூடாது என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டுடன், இங்கிலாந்து மன்னர் சார்லஸ் முழுமையாக உடன்படுவதாக அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். "என்னை விட மன்னர் சார்லஸ் இந்த விவகாரத்தில் என்னுடன் அதிகமாக உடன்படுகிறார்" என அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
