இலங்கை எரிபொருளை QR ஒதுக்கீட்டின் கீழ் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும்???

Author
0

 நாட்டில் இன்று (01) மட்டும் வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கம் ஒற்றை மற்றும் இரட்டை எண்களாக இருப்பதைக் கருத்தில் கொள்ளாமல், அனைத்து வாகனங்களும் தங்களது QR ஒதுக்கீட்டின் கீழ் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் ன இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

வழமையான நடைமுறையின்படி மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 01 ஆகிய தினங்கள் இரண்டும் ஒற்றை எண்களாக அமைவதால், இரட்டை இலக்கத் தகடுகளைக் கொண்ட வாகன உரிமையாளர்களுக்கு எரிபொருள் பெறுவதில் சிரமம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.


எரிபொருள் வழங்க அனுமதி

இதனை கருத்தில் கொண்டு, இன்றைய தினம் மாத்திரம் ஒற்றை மற்றும் இரட்டை இலக்கத் தகடுகளைக் கொண்ட அனைத்து வாகனங்களுக்கும் எரிபொருள் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, வாகன உரிமையாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாராந்திர QR ஒதுக்கீட்டின் வரம்பிற்குள் மட்டுமே எரிபொருளைப் பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சலுகை இன்று மட்டுமே செல்லுபடியாகும் என்றும், அதனைத் தொடர்ந்து மீண்டும் வழமையான ஒற்றை-இரட்டை (Odd-Even) முறை அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எரிபொருள் நிலையங்களில் தேவையற்ற நெரிசலைத் தவிர்க்கவும், விநியோக நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top