பிரித்தானியாவிற்குச் செல்லும் பயணிகளின் விசா கட்டணங்கள் உயர்வு.

Author
0

 பிரித்தானியாவிற்குச் செல்லும் பயணிகள், மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான விசா கட்டணங்களைக் கணிசமாக உயர்த்துவதாக அந்நாட்டு உள்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்த புதிய கட்டண உயர்வு வரும் ஏப்ரல் 8, 2026 முதல் அமுலுக்கு வர உயர்ள்ளது. விண்ணப்பதாரர்களின் வகைப்பாட்டிற்கு ஏற்ப கட்டணங்கள் பின்வருமாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளன.


பயண விசா (Visitor Visa)சாதாரண 6 மாத கால பயண விசா கட்டணம் 127 பவுண்டிலிருந்து 135 பவுண்டுகளாக உயர்கிறது. நீண்டகால விசா: 2 வருட விசா கட்டணம் 506 பவுண்டுகளாகவும், 10 வருட விசா கட்டணம் 1,128 பவுண்டுகளாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பணியாளர் விசா (Skilled Worker Visa): 3 ஆண்டுகள் வரையிலான தங்குதலுக்கான விசா கட்டணம் 769 பவுண்டிலிருந்து 819 பவுண்டுகளாக அதிகரிக்கிறது.

குடியேற்ற விசா (Settlement Visa): காலவரையறையற்ற தங்குமிடம் கோரும் விசா (Indefinite Leave to Remain) கட்டணம் 2,064 பவுண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top