2029 ஆம் ஆண்டிலும் அநுரவே ஜனாதிபதி

Author
0

 எதிர்வரும் 2029 ஆம் ஆண்டிலும் அநுர குமார திசாநாயக்கவே நாட்டின் ஜனாதிபதி என அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2029 ஆம் ஆண்டில் மீண்டும் அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என அவர் நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.

அநுர குமார திசாநாயக்க மீண்டும் ஜனாதிபதியாவதனை எவராலும் தடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.



தற்போதைய அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியுள்ளது எனவும் மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

கடந்த காலங்களில் நாடு ஓர் இலக்கற்ற வகையில் பயணம் செய்தது எனவும் பிழையான தீர்மானங்களே இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தற்போதைய அரசாங்கம் நிலைமைகளை மாற்றி அமைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

கடந்த சில தசாப்தங்களாகவே அநுரவை போன்று நாட்டை கட்டி எழுப்பக்கூடிய மற்றும் மக்களின் நம்பிக்கையை பெற்ற ஒரு தலைவர் உருவாகவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே 2029 ஆம் ஆண்டில் மீண்டும் அநுரவே ஜனாதிபதியாக பதவியேற்பார் என அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார். 



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top