ஜெர்மனியிலிருந்து 5,000 அமெரிக்க ராணுவ வீரர்கள் வாபஸ்!

Author
0
மே 2: "பென்டகன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!"
🚨📸
"நேட்டோ (NATO) கூட்டாளியான ஜெர்மனிக்கு அதிபர் டிரம்பின் நேரடிப் பதிலடி! - ஈரான் போர் விவகாரத்தில் வெடித்த மோதலால் படைகளைத் திரும்பப் பெற அமெரிக்கா முடிவு!"
உறவுகளே, ஈரான் போர் விவகாரத்தில் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே விரிசல் அதிகரித்து வரும் நிலையில், ஜெர்மனியிலிருந்து 5,000 அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெற அமெரிக்கப் பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் உத்தரவிட்டுள்ளார்.
இரண்டு மாதங்களாக நீடிக்கும் ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில், அமெரிக்காவை ஈரான் அரசாங்கம் "அவமானப்படுத்துவதாக" ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) விமர்சித்திருந்தார். இந்த வார்த்தைப் போருக்குப் பிறகே அதிபர் டிரம்ப் ஜெர்மனிக்கான படைகளைக் குறைக்கும் அச்சுறுத்தலை விடுத்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top