திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை கண்டி பிரதான வீதியின் ஜெயபுர பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த விபத்தானது நேற்று(20) இடம்பெற்றுள்ளது.இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர் ஹிங்குராகொட பகுதியை சேர்ந்த 62வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை முன்னெடுப்புசம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது சிரிய ரக பட்டா வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே உயிரிழந்துள்ளார்.திருகோணமலையில் இருந்து வந்த பட்டா ரக வாகனமும் திருகோணமலை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுமே இவ்வாறு மோதி விபத்து சம்பவித்துள்ளது.உயிரிழந்தவரின் சடலம் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்தில் தொடர்புடைய வாகன சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


