அண்ணாமலையின் அடுத்த மூவ் என்ன?
தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாளான ஜூன் 4 நெருங்கி வரும் நிலையில், அவரது அடுத்த அரசியல் நகர்வு குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜூன் முதல் வாரத்தில் பாஜக தேசிய தலைமையை சந்திக்க அண்ணாமலை நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுவதுடன், மறுபுறம் அண்ணாமலை நற்பணி மன்ற நிர்வாகிகளுக்கு தீவிரமாக செயல்படுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், அண்ணாமலை புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கப் போகிறாரா? அல்லது பாஜகவிலேயே புதிய பொறுப்புடன் தொடரப் போகிறாரா? என்ற கேள்வி அரசியல் அரங்கில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.
அவரது ஆதரவாளர்கள் மத்தியில், ஜூன் 4ஆம் திகதி புதிய அரசியல் பயணத்திற்கான முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அதேவேளை, அண்ணாமலை பாஜகவின் சித்தாந்தத்தோடு தொடர்ந்து பயணிப்பார் என்றும், நற்பணி மன்றங்களின் செயல்பாடுகள் கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்திலேயே மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவரது தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.
