மனதை கனக்க வைக்கும் சம்பவம் ஒன்று இலங்கையில் பதிவாகியுள்ளது. மொனராகலை கல்வி வலயத்திற்குட்பட்ட படல்கும்பூர வைகும்பூர தமிழ் கனிஷ்ட வித்தியாலயத்தின் கணித ஆசிரியர் ஒருவர், கல்விச் சுற்றுலாவின் போது கடலில் சிக்கிய மாணவியை காப்பாற்ற முயன்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் என்.எம்.எம். நுஜூம் (56) — மூன்று பிள்ளைகளின் தந்தையும், மாணவர்களால் நேசிக்கப்பட்ட ஆசிரியருமாவார். 
பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் நடைபெற்ற கல்விச் சுற்றுலாவின் ஒரு பகுதியாக நேற்று மாலை சுமார் 4.30 மணியளவில் கிரிந்த கடற்கரைக்கு சென்றிருந்தனர்.
அப்போது கடலில் நீராடிக்கொண்டிருந்த ஒரு மாணவி திடீரென அலைகளில் சிக்கி மூழ்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது.
மாணவியை காப்பாற்ற ஆசிரியர் நுஜூம் தயக்கமின்றி கடலுக்குள் சென்றுள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் சிக்கியுள்ளனர். 
மாணவி மீட்கப்பட்ட நிலையில், ஆசிரியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஒரு ஆசிரியர் பாடம் மட்டும் கற்பிப்பதில்லை… சில நேரங்களில் உயிரையே அர்ப்பணிக்கிறார்”
