அமைச்சர் விஜித நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம்!

Author
0

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், வரை நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.இரு நாடுகினதும் அரசாங்கங்களின் அழைப்பை ஏற்று இந்த மாதம் 26 திகதி முதல் ஜூன் 03 திகதி வரையில் அவர் இந்த விஜயங்களை மேற்கொள்ள உள்ளார்.இந்த விஜயத்தின் போது, அமைச்சர் விஜித ஹேரத் நியூசிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் மற்றும் அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் பென்னி வொங் ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.மேலும், இரு நாடுகளிலுமுள்ள சிரேஷ்ட அரசாங்கப் பிரதிநிதிகள், அதிகாரிகள், வர்த்தகத் தலைவர்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் அங்கு வாழும் இலங்கைச் சமூகத்தின் உறுப்பினர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.

இந்த விஜயத்தின் முக்கிய சிறப்பம்சமாக, நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராலயத்தை அமைச்சர் விஜித ஹேரத் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கவுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.இந்த விஜயமானது நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுடன் இலங்கை கொண்டுள்ள நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்துவதோடு, பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top