யாழ். விரிவுரையாளர் கொலை வழக்கில் சந்தேக நபர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு..!

Author
0

 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட சித்தமருத்துவத்துறை விரிவுரையாளர் கொலை வழக்கில் கைதான இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் மே மாதம் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்று(30.04.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


வழக்கு விசாரணை ஒத்திவைப்பு


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்தமருத்துவத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் தயாளினி திலீபன் படுகொலை செய்யப்பட்டு தனங்கிளப்பு பகுதியில் உருக்குலைந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிரேஷ்ட விரிவுரையாளரின் மருமகன் மற்றும் மகள் ஆகியோர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய நேற்று(30.04.2026) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.



இதனைத் தொடர்ந்து வழக்கு நேற்றைய தினம் மீண்டும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷானும் முதலாவது சந்தேக நபரான விரிவுரையாளரின் மருமகன் சார்பில் சர்மினி விக்னேஸ்வரனும் இரண்டாவது சந்தேக நபராக பெயர் குறிப்பிடப்பட்ட சிரேஷ்ட விரிவுரையாளரின் மகள் சார்பில் சட்டத்தரணி சமந்த அத்துக்கோரளவின் வழிகாட்டலில் சட்டத்தரணி வீ.கௌதமனும் முன்னிலையாகியுள்ளனர்.

இதன்போது, மரண விசாரணையை எதிர்வரும் மே 20ம் திகதி நடத்த தீர்மானித்துள்ள நீதிவான் எஸ்.லெனின்குமார், சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் மே மாதம் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.  



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top