மே 5: "மர்மத்தைக் காக்கும் அமெரிக்க அதிபர்!"
"அமெரிக்கக் கப்பல்களைத் தாக்கினால் ஈரான் அழிந்துபோகும்! - ஒரே பேட்டியில் முரண்பட்ட கருத்துகளைத் தெரிவித்த டிரம்ப்!"
ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்காவும் ஈரானும் ஒன்றையொன்று தாக்கி ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான போர்நிறுத்தம் தொடர்ந்து நீடிக்கிறதா என்ற கேள்விக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் நேரடியாகப் பதிலளிக்க மறுத்துவிட்டார்! 


பழமைவாத வானொலித் தொகுப்பாளர் ஹக் ஹெவிட் நேற்றிரவு அதிபர் டிரம்பிடம், ஈரானுடனான போர்நிறுத்தம் "முடிந்துவிட்டதா?" என்றும், மீண்டும் தாக்குதல்கள் தொடங்குமா என்றும் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த டிரம்ப், "அதை நான் இப்போது உங்களுக்குச் சொல்ல முடியாது" என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "நான் இப்போது அந்தக் கேள்விக்குப் பதிலளித்தால், இந்த நபர் அதிபராக இருக்கப் போதிய புத்திசாலித்தனம் இல்லாதவர் என்று நீங்கள் கூறுவீர்கள்" எனத் தெரிவித்து, தனது அடுத்தக்கட்ட ராணுவத் திட்டங்களை ரகசியமாக வைத்துள்ளார்.
முன்னதாக 'ஃபாக்ஸ் நியூஸ்' (Fox News) ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ஹார்முஸ் ஜலசந்தி அல்லது பாரசீக வளைகுடாவில் உள்ள அமெரிக்கக் கப்பல்களை ஈரான் குறிவைக்க முயன்றால், ஈரானியப் படைகள் "பூமியிலிருந்தே துடைத்தெறியப்படுவார்கள்" (blown off the face of the Earth) என டிரம்ப் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்.
முரண்பாடான நிலைப்பாடு (Conflicting Statements): 

அதே பேட்டியில் சற்று நேரம் கழித்துப் பேசிய அவர், ஈரானுடனான போர் "ராணுவ ரீதியாக... அடிப்படையில் முடிந்துவிட்டது" (militarily … is essentially over) என்றும் வாதிட்டுள்ளார்.
