யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடி புகைப்படங்கள் எடுத்ததாகக் கூறப்படும் இரு இளைஞர்களை பலாலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெசாக் தினத்தை முன்னிட்டு தையிட்டி விகாரையில் விசேட மத நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், விகாரைக்கு அருகில் காணி உரிமையாளர்களின் போராட்டமும் இடம்பெற்று வந்தது.
இந்த நிலையில் வடமராட்சி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் விகாரைக்கு செல்வதாக தெரிவித்து அப்பகுதிக்குச் சென்றதுடன், அங்கு புகைப்படங்கள் எடுத்தும் நடமாடியும் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனை அவதானித்த பொலிஸார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, வழங்கப்பட்ட தகவல்களில் முரண்பாடுகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு பலாலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
