மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட பெண், தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்றுமுன்தினம்(29.04.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
அத்துடன், குறித்த உத்தரவை நீதிவான் நீதிமன்றம் நீதிபதி அண்ணாத்துறை தர்சின் பிறப்பித்துள்ளார்.
மேலும், குறித்த கடத்தல் மற்றும் கொலை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட முச்க்கரவண்டியினை பொலிஸ் காவலில் இருந்து விடுவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
