பூனையை காணவில்லை சுன்னாகம் பொலிசில் முறைப்பாடு!

Author
0
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட
சந்தை வீதி பகுதியில் தான் செல்லமாக வளர்த்து வந்த பூனையை காணவில்லை என்று முறைப்பாடு ஒன்று பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிய வருவது,
தன்னுடைய வீட்டுக்கு முன்னால் இருக்கும் காணியில் வீடு கட்டும் பணிகள் இடம் பெற்று வருவதாகவும் அதனில் கல் மணல்கள் பறித்து ஒற்றைச் சில்லு வண்டியில் கொண்டு சென்று வேலை செய்வார்கள் என்றும் ஆரம்பத்திலிருந்து அந்த காணியில் மர நிழலிலும் பாவிக்கப்படாத மலசல கூடத்திலும் தனது பூனை படுத்திருக்கும் என்றும் காணாமல் போன திகதி (2026.04.09) அன்று மாலை 6.30 மணி அளவில் அந்தக் காணியில் உள்ள மலசல கூடத்தில் படுத்திருந்ததை தான் கண்டதாகவும். 7 மணியளவில் வேலை ஆட்கள் வாகனத்தில் சென்ற பிறகு 8 மணிக்கு பூனையை சாப்பாட்டுக்கு கூப்பிட்ட பொழுது வரவில்லை என்றும் அங்கு சென்று பார்த்தும் பூனையை காணவில்லை என்றும் அதன் பின் வேலை ஆட்கள் வரவில்லை என்றும் ஒரு கிழமை கழித்து வந்தவரிடம் விசாரித்த பொழுது தெரியாது எனக்கூறியுள்ளார்.

எங்களுக்கு யாரும் இல்லை நானும் அண்ணாவும் தான் அண்ணா ஒரு மன நோயாளி பூனை காணாமல் போனதில் இருந்து நாங்கள் சமைக்கவில்லை மனம் உடைந்து போய் உள்ளேன். எனவே அங்கு வேலை செய்தவர்களின் உயர் முகவரியை பெற்றுத் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

இதன் அடிப்படையிலேயே முறைப்பாட்டை பதிவு செய்வதற்காக வந்துள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top