அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று(19.05.2026) மேலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், நேற்றுடன் ஒப்பிடும் போது ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி
இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி இன்று 338.07 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 328.23 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, நேற்றையதினம் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 326.74 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 334.26 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
