நிலவி வரும் கடும் மழைத்துடனான சீரற்ற வானிலை காரணமாக, ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று (15) விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது
மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரின் ஆலோசனையின் பேரில் ,ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது
ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்குமாறு அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கற்பித்தல் செயற்பாடுகள் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்காகவும் இன்றைய தினம் ஆசிரியர்களையோ அல்லது மாணவர்களையோ பாடசாலைக்கு அழைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை நுவரெலியா வலயப் பாடசாலைகளைப் பொறுத்தமட்டில், நிலவும் தேவையைக் கருத்திற்கொண்டு வலயக் கல்விப் பணிப்பாளர்களின் ஆலோசனையின் கீழ் உரிய தீர்மானங்களை எடுப்பதற்கு அதிபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
