சி..றுவர் பாதுகாப்பை வலுப்படுத்த இலங்கை - யுனிசெப் முக்கிய பேச்சுவார்த்தை!

Author
0
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் (UNICEF) நிறைவேற்றுச் சபைப் பிரதிநிதிகள் குழு, இன்று (04) அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டது.
📌 இந்த சந்திப்பில் சிறுவர்களின் உரிமைகள் மற்றும் நலன் தொடர்பான பல முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டன.
முக்கியமாக,
✅ சி..றுவர்களுக்கான சட்டப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துதல்
✅ சி..றுவர்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் தடுப்பதற்கான நடவடிக்கைகள்
✅ போசாக்கின்மை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல்
✅ சி..றுவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கான புதிய ஒத்துழைப்பு திட்டங்கள்
ஆகிய விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
🤝 இலங்கையின் எதிர்கால தலைமுறையின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சிக்காக யுனிசெப் மற்றும் அரசாங்கம் இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவமும் இந்த சந்திப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
👧👦 சிறுவர் பாதுகாப்பு, கல்வி மற்றும் நலன் தொடர்பான நடவடிக்கைகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top