முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ தொடர்பான வழக்கு ஜூலை 09ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (04) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ள மறுஆய்வு மனு தொடர்பான தீர்ப்பு கிடைக்கும் வரை சாட்சிய விசாரணைகளை தற்காலிகமாக நிறுத்துமாறு அரச தரப்பு கோரிக்கை விடுத்திருந்தது.

அதனை பரிசீலித்த நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகும் வரை வழக்கை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளது.

இதன்படி, அடுத்த விசாரணை ஜூலை 09ஆம் திகதி நடைபெறவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த வழக்கின் அடுத்த கட்ட முன்னேற்றங்கள் அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.