டுபாயில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பங்கேற்பு
உலகின் முக்கிய அரசியல், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப தலைவர்களை ஒரே மேடையில் இணைக்கும் 2025 உலகத் தலைவர்கள் உச்சி மாநாடு இன்று (11) டுபாயில் ஆரம்பமாகியுள்ளது.

ஜூன் 11 முதல் 13 வரை நடைபெறும் இந்த மாநாட்டில் 150 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 4,000க்கும் மேற்பட்ட தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் பங்கேற்கவுள்ளனர்.

ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி ஷேக் மொஹமட் பின் சயிட் அல் நஹியனின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று டுபாய் நோக்கி பயணமானார்.

மாநாட்டில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் சிறப்பு உரையாற்றவுள்ளார்.

எதிர்கால தொழில்நுட்பங்கள்

செயற்கை நுண்ணறிவு (AI)

பொருளாதார வளர்ச்சி

உலகளாவிய சவால்கள் மற்றும் புதிய வாய்ப்புகள்
ஆகிய விடயங்கள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன.

மாநாட்டின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பல உலகத் தலைவர்களுடனும் இருதரப்பு சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி மற்றும் பிரதமருடனான முக்கிய சந்திப்புகளும் நடைபெறவுள்ள நிலையில், இலங்கைக்கு முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது.

தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, வலுசக்தி, சுற்றுலா, நிதி மற்றும் ஊடகத் துறைகளில் உலக முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

இலங்கையின் சர்வதேச உறவுகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளுக்கு இந்த மாநாடு முக்கிய தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.