யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருந்த குடும்ப திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக சுவிஸ்லாந்திலிருந்து வருகை தந்த 51 வயதுடைய குடும்பப் பெண் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மகிழ்ச்சியான குடும்ப நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தாயகம் வந்திருந்த நிலையில் ஏற்பட்ட இந்த துயரச் சம்பவம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வைத்தியசாலை வட்டாரங்களின் தகவலின்படி, உயிரிழந்த பெண் ஏற்கனவே சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து உறவுகளுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வந்த பயணம், துயரத்தில் முடிந்தமை பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

உயிரிழந்தவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன், குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களும் அனுதாபங்களும்.