1997 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பான வழக்கில், 8 பிரதிவாதிகளுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
நீண்டகாலமாக விசாரணை செய்யப்பட்ட இந்த வழக்கில், அரசுத் தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தீர்மானித்ததைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இன்று (08) நடைபெற்ற நீதிமன்ற அமர்வில், 7 பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையான நிலையில், மற்றொரு பிரதிவாதி இல்லாமலேயே விசாரணையை முன்னெடுத்து தீர்ப்பளிக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்தது.
1997 ஆம் ஆண்டு கொழும்பு நீதிமன்ற அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற கொலை மற்றும் பலருக்கு காயம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
