36 ஆண்டுகளாக காணி இழந்த பலாலி மக்கள் மீண்டும் வீதியில்!

Author
0

பலாலி மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியின் இன்று(12) நான்காவது தடவையாகவும் முன்னெடுக்கப்பட்டது.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்து கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

போராட்டம்

தமது காணிகளை இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில் தான் நீண்ட காலமாக நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டனர்.

இதன்போது கொட்டகை அமைத்து போராட்டத்தை முன்னெடுக்க மக்கள் முயற்சித்த போதும் பொலலசார் தடுத்தனர்.மக்கள் கொளுத்தும் வெயிலில் தொடர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top