(கிழக்கு மாகாண செய்தியாளர்)
கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதி பெரியநீலாவணை எரிபொருள் நிரப்பு நிலையத்தை அண்டியதாக இன்று(16) காலை வேளையில் இடம் பெற்றவிபத்தில் தியாகராஜா ஜெயகிருஸ்ணன் (36) என்பவர் உயிர் இழந்துள்ளார்.வாழைச்சேனை இருந்து கதிர்காமம் நோக்கி சென்ற பேருந்தில் கல்முனை பகுதியில் இருந்து மட்டக்களப்பு பகுதியை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றவரே விபத்தில் உயிரிழந்திருந்தார்.குறித்த நபர் மட்டக்களப்பு நொச்சி முனையை சேர்ந்தவரென்றும் பாண்டிருப்பில் திருமணம் செய்து வசிப்பவர் என்றும் கூறப்படுவதோடு களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் வேலை செய்பவர் என்றும் தெரியவந்துள்ளது.மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
பெரியநீலாவணை-மருதமுனை வீதி விபத்தில் சிக்கி பாண்டிருப்பு நபர் உயிரிழப்பு!
ஜூலை 16, 2026
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க


