முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்ச, எதிர்வரும் ஜூலை 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் (FCID) இன்று முற்பகல் கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
விமல் வீரவன்ச அமைச்சராக பதவி வகித்த காலத்தில், அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே சரத் வீரவன்ச கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
