விஜய்யின் "சைனா பொம்மை" அரசு? – ஸ்கிரிப்ட் இல்லாமல் விவாதிக்க தயாரா? ஆர்.பி. உதயகுமார் ஓபன் சவால்!

Author
0
தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள காணொளியில், "விஜய் தலைமையிலான அரசு வெறும் 'சைனா பொம்மை' அரசு" என்றும், "ஸ்கிரிப்ட் இல்லாமல் முக்கிய பொதுப் பிரச்சினைகள் குறித்து ஒரே மேடையில் விவாதிக்க விஜய் தயாரா?" என்றும் சவால் விடுத்துள்ளார்.
மேலும், மேகதாது, பாலாறு, முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு, மின்வெட்டு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் எடப்பாடி கே. பழனிசாமி அல்லது தன்னுடன் நேரடி விவாதத்தில் பங்கேற்குமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அதேவேளை, பழநி கோயில் நிலம் தொடர்பான விவகாரம் குறித்தும் பல கேள்விகளை எழுப்பியுள்ள அவர், அதற்கு முதலமைச்சர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்தக் கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இதுவரை ஆர்.பி. உதயகுமாரின் குற்றச்சாட்டுகளுக்கு தமிழக அரசு அல்லது தமிழக வெற்றிக் கழகம் அதிகாரப்பூர்வ பதில் வெளியிடவில்லை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top