ரோஹினி திரையரங்கில் சாலையை ஆக்கிரமித்த பைக் பார்க்கிங்! – விஜய் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த போலீசார்!

Author
0
நடிகரும், தமிழக முதலமைச்சருமான விஜய்யின் "ஜனநாயகன்" திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், சென்னை கோயம்பேடு ரோகினி திரையரங்கம் முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர்.
திரைப்படத்தை காண அதிகாலையிலிருந்தே ரசிகர்கள் திரையரங்கில் திரண்டிருந்த நிலையில், பலர் தங்களது பைக்குகளை சாலையோரத்தில் விதிமுறைகளை மீறி நிறுத்தியதால், அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்து போலீசார், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த இருசக்கர வாகனங்களை லாரியில் ஏற்றி அப்புறப்படுத்தினர்.
இதேவேளை, நெல்லை ராம் திரையரங்கிலும் ரசிகர்களின் கொண்டாட்டத்தின் போது பரபரப்பு ஏற்பட்டது. கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த சில ரசிகர்களை விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றதைத் தொடர்ந்து, ரசிகர்கள் போலீஸ் வாகனத்தை மறித்து எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top