ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான விசாரணையில், பிரேத பரிசோதனை (தடயவியல்) அறிக்கை இன்னமும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாததால், அரச சட்ட வைத்திய அதிகாரிக்கு மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்புமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தடயவியல் அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை என கொழும்பு குற்றப்பிரிவு (CCD) அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதையடுத்து, பிரேத பரிசோதனை அறிக்கையை மேலும் தாமதமின்றி உடனடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரச சட்ட வைத்திய அதிகாரிக்கு மீண்டும் நினைவூட்டல் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் மேலதிக விசாரணை எதிர்வரும் மாதம் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
