அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து! – இளைஞர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழப்பு!

Author
0
ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இன்று (19) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
பொலிஸாரின் தகவலின்படி, இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில், அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பர் லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் பன்னிப்பிட்டிய மற்றும் கிரிவத்துடுவ பகுதிகளைச் சேர்ந்த 25 வயதுடைய தில்ஷான் மதுசர செனவிரத்ன மற்றும் 17 வயதுடைய உதீஷா சித்மின என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஆரம்ப விசாரணைகளின்படி, ஹொரணையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வீடு திரும்பியபோது, கனன்வில வளைவில் திரும்ப முயன்ற சந்தர்ப்பத்தில் மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்ப்பாதைக்குள் நுழைந்ததே விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து டிப்பர் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்று நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top