பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 2026 ஜூலை 18 அன்று அலரி மாளிகையில், தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மகா சங்க நாயக்க தேரர்கள் குழுவினரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இந்தச் சந்திப்பில், அதிவணக்கத்திற்குரிய ப்ரா தம்மவஜிரபண்யாசார்ய மஹாதேரர் உள்ளிட்ட தாய்லாந்தின் மகா சங்க நாயக்க தேரர்கள் மற்றும் மஹாசுலாலொங்கோர்ன்ராஜவித்யாலய பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
கலந்துரையாடலின் போது, இலங்கை – தாய்லாந்து இடையிலான பல நூற்றாண்டுகளாக நீடித்து வரும் பௌத்த, மத மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்துவது உள்ளிட்ட விடயங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
சந்திப்பின் நிறைவில், இரு நாடுகளின் பௌத்த பாரம்பரியம் மற்றும் கலாசார உறவைப் பிரதிபலிக்கும் விசேட நினைவுச் சின்னங்களை, தாய்லாந்தின் மகா சங்க நாயக்க தேரர்கள் பிரதமருக்கு வழங்கி வைத்தனர்.
