மன்னார் மருதமடு அன்னையின் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

Author
0
⛪️ மன்னார் மருதமடு அன்னையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணி மாதத் திருவிழா, நேற்று (06) மாலை கொடியேற்றத்துடன் சிறப்பாக ஆரம்பமானது.
🚩 மாலை 5.30 மணியளவில், மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் திருவிழா கொடியேற்றப்பட்டது.
🤝 இந்நிகழ்வில்,
மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார்
மறைமாவட்ட குருமார்கள்
திரளான பக்தர்கள்
ஆகியோர் கலந்துகொண்டனர்.
🕊 கொடியேற்றத்தைத் தொடர்ந்து நவநாள் திருப்பலிகள் ஆரம்பமாகியுள்ளன.
🙏 நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மருதமடு திருத்தலத்திற்கு வருகை தந்து வருகின்றனர்.
📅 திருவிழா நிகழ்வுகள்:
📍 ஆகஸ்ட் 14 – மாலை வேஸ்பர் ஆராதனை
📍 ஆகஸ்ட் 15 – காலை 6.15 மணி, மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில் ஏனைய மறைமாவட்ட ஆயர்களுடன் இணைந்து திருவிழா கூட்டுத்திருப்பலி நடைபெறவுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top