காலாவதியான பன்கள் விற்பனை – ரூ.2 இலட்சம் அபராதம்!

Author
0
🥐 நுகர்வோரைத் திசைதிருப்பும் வகையில் காலாவதியான பேக்கரி தயாரிப்புகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில், குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட பேக்கரி நிறுவனத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் ரூ.200,000 அபராதம் விதித்துள்ளது.
🔎 நுகர்வோர் விவகார அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் பரிசோதனையின்போது, குறித்த வர்த்தக நிலையத்தில் 2026/04/16 காலாவதித் திகதியிடப்பட்ட ஸ்ட்ரோபெரி சுவையூட்டப்பட்ட கிரீம் பன்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
⚖️ இதனைத் தொடர்ந்து நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், நேற்று (09) வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
📌 இதன்போது குற்றஞ்சாட்டப்பட்ட நிறுவனம் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, நீதவான் ரூ.2 இலட்சம் அபராதம் விதித்துள்ளார்.
⚠️ நுகர்வோர் அவதானம்!
🛒 உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும்போது, அதன் உற்பத்தித் திகதி மற்றும் காலாவதித் திகதியை கட்டாயம் சரிபார்க்கவும்.
📞 காலாவதியான உணவுப் பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் தொடர்பான தகவல்களை 1977 என்ற துரித இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top