தமிழ்நாட்டில் டெங்கு, ப்ளூ காய்ச்சலுடன் ஸ்கிரப் டைபஸ் எனப்படும் உண்ணி காய்ச்சலும் பரவி வருகிறது. சிகர் மைட் எனப்படும் பூச்சியின் கடியால் இந்த நோய் ஏற்படுகிறது.
அதிக காய்ச்சல், தலைவலி, உடல்வலி, சோர்வு, வறட்டு இருமல் ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும். சிலருக்கு பூச்சி கடித்த இடத்தில் சிரங்கு அல்லது நெறிகட்டுதலும் ஏற்படலாம்.
ஆகஸ்ட் முதல் ஜனவரி வரை நோய் பரவும் வாய்ப்பு அதிகம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்து சிகிச்சை பெற வேண்டும்.
வயல்வெளி மற்றும் புதர்கள் நிறைந்த பகுதிகளுக்குச் செல்லும்போது உடலை முழுமையாக மூடும் ஆடைகளை அணிந்து பூச்சிக் கடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இது குறித்து மருத்துவ நிபுணர் அருணாச்சலம் கொடுத்துள்ள விரிவான விளக்கம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த பதிவில் காணொளி வாயிலாக முழுமையாக காணலாம்.

