யாழ். கந்தர்மட சந்தியில் விபத்து

Author
0

யாழ்ப்பாணம்- கந்தர்மட பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த விபத்தானது இன்றையதினம்(19.9.2026) இடம்பெற்றுள்ளது.


பலாலி வீதியூடாக யாழ்ப்பாண நகர் பகுதியில் இருந்து பயணித்த மோட்டார் சைக்கிளும் ஓட்டுமட வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளும் கந்தர்மட சந்தியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் , சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top