சமூக ஊடகங்களில் குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பதிவிடுவோருக்கு எச்சரிக்கை

Author
0

 சமூக ஊடகங்களில் குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பதிவிடுவது குறித்து மக்கள் கவனமாக இருக்குமாறு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.


பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான பணமாக்கல் கொள்கை நடைமுறைபடுத்தப்பட்டதால், பெற்றோரின் அனுமதியுடனோ அல்லது அனுமதியின்றியோ குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தில் பதிவேற்றும் போக்கு வேகமாக அதிகரித்துள்ளது என்று அமைச்சகம் கூறுகின்றது.

மேலும், குழந்தைகளின் திறமைகளை வெளிப்படுத்துவது மற்றும் அவர்களின் அழகான செயல்களைப் பாராட்டுவது என்ற போர்வையில், பல்வேறு தனிநபர்களும் நிறுவனங்களும் இந்த காணொளிகளை வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

காணொளிகள் மற்றும் (vlogs) மூலம் குழந்தைகளின் அன்றாட வாழ்க்கையை வெளித்தரப்பினருக்கு வெளிப்படுத்துவதால், அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு கடுமையான ஆபத்து ஏற்படுகின்றது.

மேலும், இதுபோன்ற காணொளிகள் மற்றும் புகைப்படங்களை ஆதாரங்களாகப் பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவு (AI தொழில்நுட்பம்) மூலம் ஆபாசப் படங்கள் உருவாக்கப்படும் அபாயமும் உள்ளது.

எனவே, இதுபோன்ற அபாயகரமான சூழ்நிலைகளிலிருந்து தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போது அதிக விழிப்புடனும் பொறுப்புடனும் இருக்குமாறு பெற்றோர்களையும், தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலனுக்குப் பொறுப்பானவர்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top