மோசடி வழக்கில் இருந்து உதய கம்மன்பில விடுதலைவ்

Author
0

அவுஸ்திரேலிய வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான நிறுவனப் பங்குகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி 21 மில்லியன் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அவுஸ்திரேலிய வர்த்தகரான பிரையன் ஷாடிக் என்பவருக்குச் சொந்தமான நிறுவனப் பங்குகளை போலி அதிகாரப் பத்திரத்தைப் பயன்படுத்தி விற்பனை செய்து 21 மில்லியன் ரூபாய் நிதி மோசடி புரிந்ததாகக் கூறி, கடந்த 'நல்லாட்சி' அரசாங்கக் காலத்தில் உதய கம்மன்பிலவுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நீண்ட வழக்கு விசாரணைக்குப் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவந்துருகொட இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

தீர்ப்பை அறிவித்த நீதிபதி, பிரதிவாதியான உதய கம்மன்பிலவுக்கு எதிராக முறைப்பாட்டாளரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியமைக்கு அமைவாக உதய கம்மன்பில விடுவிக்கப்பட்டதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top