தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நேற்று (10) சென்னை விமான நிலையத்திலிருந்து இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றார்.

முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம்!
இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள், தொழில் பிரதிநிதிகளைச் சந்தித்து, தமிழ்நாட்டில் புதிய தொழில் திட்டங்களைத் தொடங்கவும், ஏற்கனவே உள்ள முதலீடுகளை விரிவுபடுத்தவும் முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுக்க உள்ளார்.

உற்பத்தி, வாகனத் தொழில், மின்னணுவியல் உள்ளிட்ட முக்கிய துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதுடன், தமிழ்நாட்டை முன்னணி முதலீட்டு மையமாக முன்னிறுத்துவதே பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.

மேலும், உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு மற்றும் தொழில் வாய்ப்புகள் தொடர்பிலும் இப்பயணத்தின் போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

முதலமைச்சர் தலைமையிலான குழு செப்டெம்பர் 10ஆம் திகதி புறப்பட்டு, செப்டெம்பர் 17ஆம் திகதி சென்னை திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள்… புதிய வேலைவாய்ப்புகள்!