லிந்துலை லெந்தோமஸ் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவர்கள் இன்றைய தினம் தேயிலை தோட்டத்தில் தொழிலில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
உயிரிழந்தவர் லிந்துலை லெந்தோமஸ் பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய ஆண் ஒருவர் என தெரியவந்துள்ளது.
மேலும் குளவிக் கொட்டுக்கு இலக்கான 4 தொழிலாளர்கள் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

.jpg)