காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசன மற்றும் குடிநீர்த் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், மேட்டூர் அணையிலிருந்து இன்று (01) தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதற்காக சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, பெருந்திரளான பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
